Powered By Blogger

Friday, January 6, 2012

நாங்கள் விழிப்பாக இருக்கிறோமா.............



தே.தேவானந்த்,
பணிப்பாளர்,ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கல்வியறிவுடையவர் அல்லது படித்தவர் என்பது என்பது ஒருவர் எழுத வாசிக்கத் தெரிநதிருத்தல் என்பதை குறித்தது.ஆனால் இன்று படித்தவர் என்பதன் அர்த்தம் சற்று வித்தியாசமானதாகும்.அதாவது எழுத வாசிக்கத் தெரிந்திருப்பதோடு வௌ;வேறு வகையான ஊடகங்களை வெற்றிகரமாக கையாள்வதற்கும்,புரிந்து கொள்வதற்கும் வியாக்கியானிப்பதற்கும் தெரிந்திருத்தல் என்பதைக ;குறிக்கிறது.

நிறையத் தகவல்கள் வெவவேறு ஊடகங்கள் ஊடாக எமக்கு கிடைக்கின்றன.அவற்றிக்கிடையில் நிறைய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

இன்று எமது வாழ்வென்று எதை நாம் கருதுகின்றோம் எமது நாளாந்த பழக்கங்களும் வழக்கங்களும் யாரால் சொல்லித்தரப்படுகின்றன?எதை நாம் மெய்யென்றும் யதார்த்தமென்றும் கருதுகின்றோம்?என்று சிந்தித்தோமானால் எமக்கு கிடைக்கின்ற பதில் மீடியா’ அதாவது ஊடகம்.முன்பெல்லாம் நாம் பத்திரிகையை மட்டுமே ஊடகமாக கருதிவந்திருக்கிறோம்.இதனாலேயே இதழியல்துறை, பத்திரிகைத்துறை என்று அழைக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.ஆனால் இன்று அதிகளவில் ஊடகம் என்ற சொல்லை அல்லது பல்லூடகம் என்ற சொல்லைப்பயன்படுத்துகின்றோம்.

‘இன்று ஊடகங்கள் எதை யதார்த்தமென்று அடையாளப்படுத்துகின்றனவோ அல்லது உணர்த்துகின்றனவோ அதுவே இன்று எமது யதார்த்தமாகவும் கருதப்படுகின்றது.ஊடகத்தில் வருவதில் எந்தத்தவறும் இருக்காது.அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது அதை அப்படியே நம்பி எமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கேற்ப செயற்பட வெண்டுமென்ற எண்ணம் எம் அறிவு சார்ந்த தளத்தையும் தாண்டி மேலோங்கியிருக்கிறது என்பதை மறுக்கமுடியவில்லை.’